Ads Area

இலங்கையின் கிருலப்பனை, பாதுக்க, களுத்துறை மற்றும் ரங்கல பிரதேசங்களில் போலி நாணயத் தாள்கள்.

இலங்கையின் கிருலப்பனை, பாதுக்க, களுத்துறை மற்றும் ரங்கல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது போலி நாணயத்தாள்களை விநியோகிக்கும் பல இடங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

போலியான ரூபாய் நோட்டுகளுடன் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5000 மற்றும் ரூ. 1000 நோட்டுகள், அச்சிடும் இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்கள் சோதனையின் போது கைப்பற்றப்பட்டுள்ளன.

டிசம்பர் பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்களை புழக்கத்தில் விடுவதில் சந்தேகநபர்கள் கவனம் செலுத்தி வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுவது தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பண பரிவர்த்தனைகளின் போது மாற்றக்கூடிய போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலைய உரிமையாளர்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போலி நாணயத் தாள்களை மாற்ற முயற்சிக்கும் சந்தேக நபர்களைப் பற்றி பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 ஐத் தொடர்பு கொண்டு பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். 

(நியூஸ் வயர்)



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe