Ads Area

எரிபொருள் விலை உயர்வு: விலை நிர்ணயம் தொடர்பாக பேக்கரி உரிமையாளர்கள் புதிய முடிவு.

ரொட்டி உட்பட எந்தவொரு பேக்கரி பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலை கிடையாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு விலை இடைநிறுத்தம் இன்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பேக்கரி பொருட்களின் விலை வழங்கல் மற்றும் தேவைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனம் (LIOC) ஆகியவை இன்று முதல் எரிபொருள் விலையை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வால் உணவுப் பொருட்களின் போக்குவரத்துக்கு அதிக செலவு ஏற்படுகிறது.

இதனையடுத்து அனைத்து பேக்கரி பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நீக்கியுள்ளது. 

(நியூஸ் வயர்)



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe