துபாயில் ஒரு எமிராட்டி குடும்பத்திற்கு மாதம் 2,200 திர்ஹம் சம்பளத்திற்கு வேலை செய்து வரும் இந்தியர் ஒருவர் அபுதாபியில் நடந்த சமீபத்திய பிக் டிக்கெட் வாராந்திர டிராவில் 1 மில்லியன் திர்ஹம் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி) பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ரஃபீக் முகமது அகமது, 135561 என்ற டிக்கெட் எண்ணை வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. அவர் தனது பரிசுத்தொகையை டிக்கெட் வாங்கிய மற்ற ஒன்பது பேருடனும் பகிர்ந்து கொள்கிறார்.
அஹம்மது இது குறித்து ஊடகத்திற்கு வெளியிட்ட செய்தியில் தான் 1 மில்லியன் திர்ஹம் வென்றதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளர். அத்துடன், “இந்த வெற்றியின் மூலம் நான் ஒரு பெரிய தொகையைப் பெறுகிறேன், அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கூறுகையில்,
“எனக்கு இந்தியாவில் கடன்கள் உள்ளன. என் தங்கையின் திருமணத்திற்காக கடன் வாங்கினேன். இப்போது நான் அந்த கடனை திருப்பிச் செலுத்தவிருக்கிறேன். மேலும் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்பது எப்போதும் என் மனதில் உள்ளது. இந்த நேரத்தில், நான் அதற்கு அதிக பங்களிப்பை வழங்குவேன். மேலும் கிடைக்கும் தொகையில் எதிர்காலத்திற்கான சேமிப்பில் பெரும் பகுதியை ஒதுக்கி வைக்கவுள்ளேன்” என்றும் அகமது கூறியிருக்கிறார்.
அத்துடன் ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறவிருக்கும் குலுக்கலில் முதல் பரிசான 25 மில்லியன் திர்ஹம் பரிசு, இரண்டாவது பரிசான 2 மில்லியன் திர்ஹம் அல்லது நான்கு ரொக்கப் பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பையும் அஹம்மது இன்னும் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அபுதாபியின் பிக் டிக்கெட் குழுவானது இந்த மாத தொடக்கத்தில் முதல் முறையாக, டிசம்பரில் ஒவ்வொரு வாரமும் ஒரு மில்லியனரை உருவாக்கும் என்று அறிவித்தது.
அதன்படி டிசம்பர் மாதத்தில் மொத்தம் நான்கு வாரந்திர டிராக்கள் நடைபெறும். டிசம்பர் 9 அன்று, பிக் டிக்கெட்டின் முதல் வாராந்திர டிரா நடைபெற்றது. தற்பொழுது இரண்டாவது வாராந்திர டிரா நடைபெற்றுள்ளது.
மூன்றாவது வாராந்திர டிரா டிசம்பர் 17-24 வரை டிக்கெட்டுகளை வாங்கிய நபர்களுக்கு டிசம்பர் 24 ம் தேதி டிரா நடைபெறும். இதில் வெல்பவருக்கும் 1 மில்லியன் திர்ஹம் ரொக்கப்பரிசு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
Thanks - https://www.khaleejtamil.com/