சல்வா பகுதியில் சாராய ஆலை ஒன்றில் பொது பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். சோதனையில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு ஆசிய நாட்டவர்களால் இந்த சாராய ஆலை நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து தலா ஏழு பிளாஸ்டிக் பாட்டில்கள் அடங்கிய 157 பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 1,099 பாட்டில்கள் , மூன்று பெரிய இயந்திரங்கள் மற்றும் சாராயம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட 161 பேரல்களும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு நேபாள சேர்ந்த பெண்கள் என்றும், அவர்களிடம் குடியிருப்பு ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.