தகவல் - சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடிசலாட் நிறுவனம் (Etisalat) இராஜ்ஜியத்தின் 50வது தேசிய தினத்தை முன்னிட்டு தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி இலவச மொபைல் டேட்டாக்களை வழங்குகிறது.
இவ் இலவச டேட்டாக்களை அமீரகத்தில் உள்ள அனைத்து எடிசலாட் (Etisalat) வாடிக்கையாளர்களும் பெற்றுக் கொள்ளலாம். இதனைப் பெற்றுக் கொள்ள *50# என்ற இலக்கத்திற்கு அழைக்க வேண்டும் அல்லது My Etisalat UAE App இற்குச் சென்றும் பெற்றுக் கொள்ளலாம்.
தரப்படும் இலவச 50ஜிபி இன்டர்நெட்டும் டிசம்பர் 01ம் திகதி முதல் 07ம் திகதி வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

