(அஷ்ரப் ஏ சமத்)
"நாடி" பெருமையுடன் வழங்கிய இசைச்சங்கமம் பாடல் வெளியீட்டு விழா கொழும்பு Colombo City Centre இல் அமைந்துள்ள Scope Cinemas திரையரங்கில் கடந்த வெள்ளி மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
தெரண தொலைக்காட்சி பெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ள பாடல்களுக்கு நிமேஸ் குலசிங்க,சத்துரங்கன டி சில்வா ஆகியோர் இசை வழங்க தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பொத்துவில் அஸ்மின் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
பாடல்களை கோகுலன் சாந்தன் (யாழ்ப்பாணம்) ,சுதர்சினி கோணேஸ்வரன் (திருகோணமலை) குகனேஸ்வரன்(பதுளை) சாதீர் அஹமட் (கொழும்பு) ரவி ரொயிஸ்ட்டர் (மாத்தறை) ஆகியோர் பாடியுள்ளனர்.
கலைகள் ஊடாக இன ஐக்கியத்தை ஏற்படுத்தி இலங்கை மண்ணை செழுமையாக்குவோம் என்ற தொனிப்பொருளில் தெரண தொலைக்காட்சியின் பிரதித்தலைவரும் பிரதம நிறைவேற்று பணிப்பாளருமான லக்சிரிவிக்ரமகே அவர்களின் எண்ணக்கருவில் உருவான "இசை சங்கமம்" நான்கு பாடல்களிலும் இலங்கையின் அனைத்து சமூகத்தை சேர்ந்த கலைஞர்கள் நான்கு திசைகளிலும் இருந்து பங்களிப்பு செய்துள்ளனர்.
பாடல் வெளியீட்டு நிகழ்வுக்கு இலங்கையின் பிரபல கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், கவிஞர்கள், கலந்து விழாவினை சிறப்பித்தனர்.
பாடல்களை தெரண தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிபர் திரு.டிலித் ஜெயவீர அவரது துணைவி நெலும் ஜெயவீர நிறுவனத்தின் பிரதித்தலைவர் லக்சிரி விக்ரமகே, நிகழ்ச்சிப்பிரிவு இயக்குனர் சர்மிளா தர்மராசா பொன்சேகா ஆகியோர் இணைந்து eTunes.lk யூடியுப் தளத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுவைத்தனர். இசை சங்கமம் நிகழ்ச்சியினை பிரபல ஊடகவியாளர்கள் சரவணபவன் சத்தியப்பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
"நானாக நானில்லை","மொட்டுவிட்ட பூங்கொடி","நிலவா நடநடந்து", "துள்ளி எழுந்திடு தோழா" ஆகிய பாடல்களை etunes யூடியுப் தளத்தில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
-பாடலாசிரியர் அஸ்மின்-
பாடல்களை ரசிக்க..
http://www.etunes.lk/newrelease/