நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் நிந்தவூர் பிரதேச சபை முன்னெடுத்த டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் அஷ்ரப் தாஹிர் தலைமையில் நிந்தவூர் வெளவாலோடை பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது வீடு வீடாக சென்று டெங்கு பெருக்கத்தை தடுக்கும் வகையில் குப்பை கூழங்களை அகற்றியதுடன் உக்கக்கூடிய மற்றும் உக்காத கழிவுகளை முறையாக அகற்றுவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது. இதன்போது குப்பைகளை சேகரிப்பதற்கான பைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த சந்திப்பில் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், மற்றும் ஊழியர்கள், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி, நிந்தவூர் சுகாதார வைத்திய அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.