முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை அவர்களின் அனுமதியில்லாமல் பதிவிட்டு அவர்களை ஏலம் விடும் செயலி குறித்து சிவசேனா எம்.பி.பிரியங்கா சதுர்வேதி மும்பை போலீஸில் புகார் செய்துள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
அதேபோல டெல்லியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் தன்னுடைய படத்தை மாற்றம் செய்து தவறான முறையில் செயலியில் பதிவிட்டுள்ளதாகக் கூறி உரிய ஆதாரங்களுடன் டெல்லி போலீஸில் புகார் செய்துள்ளார்.
முஸ்லிம் பெண்களை அவதூறு செய்யும் வகையில் புகைப்படங்களை அவர்களுக்குத் தெரியாமலேயே பதிவேற்றம் செய்து ஏலம் விடும் அந்த செயலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஒவைசி எம்.பி. காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த செயலியில் மூலம் ஏலம் விடப்படவில்லை என்றாலும், முஸ்லிம் பெண்களை அவதூறு செய்வதை நோக்கமாக வைத்துள்ளது. சல்லி டீல்ஸ், புல்லி பாய் ஆகிய பெயர்களில் வரும் அந்த செயலியில் முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு ' ஆஃப்தி டே' என்ற தலைப்பில் ஏலம் விடும் காட்சி இடம் பெற்றுள்ளது என்று அந்த செய்தி விவரிக்கிறது.
thank bbc