Ads Area

தேசிய ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளராக ஷிராஸ் ஜுனூஸ் நியமனம்.

 நூருல் ஹுதா உமர்

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளராக கொழும்பை சேர்ந்த பிரபல சமூக செயற்பாட்டாளர் ஷிராஸ் ஜுனூஸ் இன்று (24) நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி இந்த நியமனத்திற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை கட்சியின் அலுவலகத்தில் வைத்து தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரபல சமூக செயற்பாட்டாளர் ஷிராஸ் ஜுனூசிடம் இன்று கையளித்தார். கடந்த காலங்களில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வளர்ச்சிக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்த ஷிராஸ் ஜுனூஸ் கடந்த கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருந்ததுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தேசிய இணைப்பாளராகவும் கடந்த காலங்களில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe