சகா.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக சிரேஷ்ட நிருவாக அதிகாரி ஜே.எம்.ஏ. டக்ளஸ் இன்று வியாழக்கிழமை (06) மாவட்ட செயலகத்தில் தமது கடமையினை பதவியேற்றுள்ளார்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய டி.எம்.எல். பண்டாரநாயக்க கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து அரசாங்க அதிபராக ஜே.எம்.ஏ. டக்ளஸ் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.