Ads Area

அபுதாபியில் ட்ரோன் தாக்குதல் - ஐ.நா.சபை கண்டனம்.

ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் ஆளில்லா விமானமான ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில்  2 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் உயிரிழந்ததுடன் 6 பேர் காயமடைந்தமைக்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது. 

அபுதாபி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எண்ணெய் நிறுவனத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் டேங்கர்கள் இந்தத் தாக்குதலினால் வெடித்துச் சிதறி தீப்பிடித்தன. மற்றொரு தாக்குதல் அபுதாபி சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்டுள்ளது.  இந்த ட்ரோன் தாக்குதலுக்கு, ஏமனில் செயற்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சி அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில்  ஐக்கிய அரபு அமீரக தலைநகர் மீதான ட்ரோன் தாக்குதலுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், கண்டனம் தெரிவித்துள்ளார்.அனைத்து தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளன என்று ஐ.நா செய்தித் தொடர்பாளர்  ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe