தகவல் - சம்மாந்துறை அன்சார்.
உலக நாடுகளில் தற்போது கொரோனாவின் 3ம் அலை ஏற்பட்டுள்ளது இந் நிலையில் வளைகுடா நாடுகளிலும் கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது அதிகரித்து காணப்படுகின்றது.
சவுதி அரேபியாவில் கடந்த ஒரு மாதற்திற்கு முன்னர் ஒரு நாளைக்கு 30, 40 என்ற கணக்கில் இருந்த கொரோனா தொற்று தற்போது ஆயிரங்களைத் தாண்டிச் செல்கிறது.
கடந்த 24 மணித்தியாலயத்தில் சவுதியில் 1746 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டும் 2 பேர் மரணித்தும் உள்ளதாக சவுதி அரேபிய சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் சவுதியில் சமூக இடைவெளி, முகக்கவசம் போன்றவற்றின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் சமூக இடைவெளி பேணும் படியும் மற்றும் முகக் கவசம் அணியும் படியும் பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.