Ads Area

மட்டு. மாவட்ட பதில் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக வைத்தியர் ஜி.சுகுணன் நியமனம்!

 (பாறுக் ஷிஹான்)

மட்டக்களப்பு மாவட்ட பதில் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக வைத்தியர் ஜி.சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (18) குறித்த பிராந்தியத்தில் உத்தியோ பூர்வமாக கடமையேற்ற பின்னர் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளரால் தனக்கு கடிதம் ஒன்றின் ஊடாக தேவை கருதி மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சேவை பதில் பணிப்பாளராக கடமையாற்றுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க தான் தன்னை கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பொறுப்பிலிருந்து உடனடியாக இடமாற்றம் பெற்று கடமையை பொறுப்பேற்றுக்கொண்டேன்.

மேலும் தனது பதவிக்காலத்தில் கல்முனை பிராந்தியத்தில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு உச்சக்கட்டத்தில் தனக்கு கிடைக்கப்பெற்றதாகவும் இதனால் மக்கள் உடனடியான தகவல்களை பெறுவதற்கு பங்களிப்பு வழங்கிய ஊடகவியலாளர்கள் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கல்முனை பிராந்திய சேவைகள் பணிமனையின் பதில் கடமைக்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசல குணவர்தனவினால் கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.பி. அப்துல் வாஜித் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe