இன்று அதிகாலை (16.01.2022) 04.45 மணியளவில் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்காங்கேணியில் வைத்து காட்டு யானை தாக்கியதில் குளத்திற்கு மீன்பிடிக்கச்சென்ற சுங்காங்கேணி, கிண்ணையடி, வாழைச்சேனை எனும் முகவரியைச் சேர்ந்த கே.ஹதீஸ்கரன் (25 வயது) காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
காயமடைந்த குடும்பஸ்தர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய தினங்களாக குறித்த பிரதேச ஆற்றங்கரையை அண்டிய பிரதேசங்களில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்துக் காணப்படுவதுடன், பிரதேச மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை காணப்படுகின்றது.