சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அல் மஜாஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தின் 12வது மாடியில் இருந்து கடந்த திங்கள்கிழமை காலை தவறி விழுந்து ஐரோப்பிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது அந்த பெண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாகவும், அவரது தலையில் எலும்பு முறிவுகள் மற்றும் நுரையீரலில் உள் இரத்தப்போக்கு காரணமாக அந்த இடத்திலேயே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப் பெண்ணின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா அல்லது தவறுதலாக விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட மரணமா என்பதைக் கண்டறிய அதிகாரிகள் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.