கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் ஜந்து வருடங்களாக காவலாளியாக கடமையற்றி இடம் மாற்றம் பெற்று சென்ற இ.நேசராசா சேவை நலன் பாராட்டு விழா.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் (தேசிய பாடசாலை) சுமார் 05 வருடங்களாக சேவையாற்றி 31.12.2021 யில் கல்முனை வலய கல்வி அலுவலகத்துக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற பகல் நேர காவலாளியான இ.நேசராசா சேவை நலன் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும் புதிய 2022ம் ஆண்டுக்கான முதலாவது ஆசிரியர்களுக்கான ௯ட்டமும் 04.01.2022 (செவ்வாய்க்கிழமை) பாடசாலையின் கேட்போர் ௯டத்தில் கல்லூரியின் அதிபா் யூ.எல்.எம். அமீன் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான திருமதி எஸ்.எஸ்.எஸ்.எம். மசூது லெவ்வை, ஆர்.எம். .அஸ்மி காரியப்பர் உதவி அதிபர் ஏ.எச். நதீரா, மனுனா, பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், பட்டதாரி பயிலுனா்கள் மற்றும் கல்விசார உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இ.நேசராசா சேவை நலன் பாராட்டு விழா நிகழ்வானது பாடசாலை ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடை பெற்றதுடன் அதன் தலைவா் அலியாா் றிபான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இ.நேசராசா ஐந்து வருட சேவையினை பாராட்டி நினைவு பரிசினை கல்லூரியின் முதல்வர் யூ.எல்.எம். அமீன் வழங்கி வைக்கப்பட்டது.
இரண்டாம் கட்ட நிகழ்வாக ஆசிரியர்களுக்கான ௯ட்டம் நடைபெற்றது.
Central TV Sri Lanka Media Networking.
ஊடக செய்திகளுக்காக..!
(முஸ்தபா முபாறக்)