(றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)
கந்தளாய் பொலீஸ் (சமூக நல மற்றும் பாதுகாப்பு பிரிவு) கந்தளாய் அல்-ஜாயா விளையாட்டுக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம்.ஜவாஹிர் தலைமையில் இன்று (16) இடம் பெற்றது.
இதன் போது குளத்தை அண்டிய கரையோரப் பகுதிகளில் பிரயாணிகளால் வீசப்படும் திண்மக் கழிவுகளை அகற்றி குளப் பிரதேசத்தை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.