Ads Area

மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பள்ளிவாசலின் 2022ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு.

 (றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)

மூன்று வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பள்ளிவாசலின் (பெரிய பள்ளிவாசல்)   2022ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவு பள்ளிவாசல் மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிர்வாகத் தெரிவுகள் அனைத்தும் 103 மரைக்கார்மாரைக் கொண்டு இயங்கும் இப்பள்ளிவாசல் குடிவழி முறைமூலம் இடம் பெறுவது வழமை.

அதனடிப்படையில்  2022ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற நிர்வாகத் தெரிவில் 103  பேர்களிலிருந்து தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்  கலாநிதி ஜ.எல்.எம்.மாஹிர் அவர்கள் கபீர் ஜும்மா பள்ளிவாசலின் புதிய தலைவராகவும்,  ஓய்வு நிலை கல்முனை காணி மாவட்டப் பதிவாளர் முஸத்திக் ஜே.முஹம்மத் அவர்கள் உப தலைவராகவும்,  சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் அல்-ஹாஜ் நியாஸ் எம். அப்பாஸ் அவர்கள் பொதுச் செயலாளராகவும், வர்த்தகர் ஏ.எல்.எம்.சித்தீக் அவர்கள் உப செயலாளராகவும், வர்த்தகர் அல்-ஹாஜ் எம்.ஜ.ஏ.றஊப் அவர்கள் பொருளாளராகவும் நிர்வாக உறுப்பினர்களாக 28 பேரும் தெரிவு செய்யப்பட்டார்கள்.


(றாசிக் நபாயிஸ்)

ஊடகவியலாளர்

0760103810.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe