இலங்கை தூதுவராலயத்தின் நடமாடும் கன்சியூலர் சேவை 2022.01.07ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 03.30 மணி வரை யுனிபைட் வீசா அப்லிகேஷன் நிலையம் (Unified Visa Application Center), இரண்டாம் மாடி, அல் கதீரி நிலையம், அல் ரகா, அல்கொபார் 34226 இல் நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிலவுகின்ற கோவிட் 19 நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்நிகழ்வானது சவூதி அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக இடம் பெறுவதோடு நுழைவாயிலில் தவக்கல்னா பரிசோதிக்கப்படும் என்பதனையும் கருத்திற் கொள்க.
மேலதிக தவல்களுக்கு கன்சியூலர் பகுதி பிரதானி திரு. துல்மித் வருண, ஆலோசகர் (0559061438) அவர்களை தொடர்பு கொள்ளவும்.
இடத்தின் கூகூள் இணைப்பு: https://goo.gl/maps/e6KhM3VGmpC1ExUq8