Ads Area

சம்மாந்துறை பொது மைதானத்தில் நிர்ணயிக்கப்பட்ட எல்லைப் பகுதிற்கு வேலியிடும் பணி மற்றும் மலசலகூட தேவை ஆகியவற்றுக்கு மாஹிரின் முயற்சியினால் தீர்வு.

சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் நிலவிய எல்லைப் பிரச்சினையானது நீண்டகால இழுபறிக்குப் பின்னர் சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளுக்கு அமைய தீர்வை எட்டியிருந்த நிலையில், பிரதேச செயலகத்தினால் நிர்ணயிக்கப்பட்ட  குறித்த எல்லைக்கு வேலியிடும் பணிகளுக்கு தேவையான நிதியின்மையால் வேலியிடும் பணிகள் காலதாமதமாகியிருந்தது.

இந் நிலையில் அதற்கான நிதியானது முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதை சம்மாந்துறைப் பிரதேச சபை உறுப்பினருமாகிய ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் முயற்சியினால் சம்மாந்துறை விளையாட்டு சம்மேளத்தினருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டு தற்போது வேலியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றது. அத்தோடு சம்மாந்துறை பொது மைதானத்தின் மிக அவசியத் தேவையாகவிருந்த மலசல கூட நிர்மாணப் பணிகளும் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் முயற்சியினால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சம்மாந்துறை பொது மைதானத்தின் எல்லை நிர்ணயப் பிரச்சினைக்கு சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால்  தீர்வு கிட்டியிருந்த நிலையில் அதற்கு வேலியிடும் பணிகளுக்குத் தேவையான நிதி உதவியினை சம்மாந்துறை விளையாட்டு சம்மேளத்தினர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களிடம் கோரியமைக்கு அமைவாக மாஹிர் அவர்களினால் அதற்காக நிர்ணயிக்கப்பட்ட நிதி பெறப்பட்டு நீண்டகால இழுபறிக்குப் பின் மைதானத்திற்கு எல்லையிடும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.

மேலும் சம்மாந்துறை பொது மைதானத்தில் விளையாடும் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து வரும் விளையாட்டு வீரர்கள் தங்களது மலசல கூடத் தேவைகளுக்காக பொது மைதானத்திற்கென ஒரு மலசல கூடமின்றி பல காலமாக சிரமப்பட்டு வந்த நிலையில் சம்மாந்துறை விளையாட்டு சம்மேளத்தினரின் முயற்சியினால் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் ஒத்துழைப்பினால் தற்போது விளையாட்டு மைதானத்திற்கு என மலசலகூடமும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

சம்மாந்துறை பொதுமைதானத்தில் நிலவிய பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் பல அரசியல்வாதிகளிடம் முறையிட்டும், பல அரசியல்வாதிகள் குறித்த மைதானத்தில் இடம் பெற்ற பல விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தும் கூட அவர்களினால் பொது மைதானத்தின் பிரச்சினைகள், தேவைகள் குறித்து எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாதிருந்த நிலையில் சம்மாந்துறை விளையாட்டு சம்மேளத்தினரின் முயற்சியினால் தற்போது ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் ஒத்துழைப்போடு குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

ஊடகப் பிரிவு.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe