( காரைதீவு சகா)
ஆட்பதிவு திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான உதவி ஆணையாளராக (Asst. Commissioner) இ.திரவியராஜ் (SLAS) நேற்று (22) பதவியேற்றுள்ளார்.
இவர் அக்கரைபற்று ஆலையடி வேம்பு பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்டவராவார்.
முன்னாள் பொத்துவில் பிரதேச செயலாளராக பணிபுரிந்து தற்போது கிழக்கு மாகாண ஆள்பதிவு திணைக்களத்தின் உதவி ஆணையாளராக .இ.திரவியராஜ் பதவியேற்றுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஆள் பதிவு திணைக்களத்தின் காரியாலயத்தில் நேற்றுக் காலை பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.