Ads Area

வளர்ந்து இளம் பாடகர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் "பாடுவோர் பாடலாம்" : இசை நிகழ்ச்சி.

 (எம்.எஸ்.எம்.ஸாகிர்)

வளர்ந்து இளம் பாடகர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட 'பாடுவோர் பாடலாம்' புதிய பாடக, பாடகிகளுக்கான இசை நிகழ்ச்சி (23) கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

கலைஸ்ரீ கலை மன்றத்தின் ஏற்பாட்டில் பாடகர் கவிக்கமல் மற்றும் கலை ஸ்ரீ ஆகியோர் இணைந்து வழங்கிய இந்நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைத் தூதுவருமான அதிவண.பிதா அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ முன்னிலை கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில், தயான் லங்காவின் தலைவர் கேசவன் பத்மநாதன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு, தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர், ஸ்டார் தமிழ் வானொலி தொலைக்காட்சி ஊடகவியலாளரும் ஒலிபரப்பாளருமான எஸ்.நவநீதன் ஆகியோர் ஊடக அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இலங்கையின் பிரபல திரையிசை, மெல்லிசைப்பாடகி எஸ்.கலாவதி கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில், இசையமைப்பாளர் பசால் ஜின்னா, பிரபல தபேலா கலைஞர் ஹரிதாஸ் கண்ணா, பிரபல பாடகி மொறின் ஜெனற், இசையமைப்பாளர் தவராஜா எஸ்.ரி. தேவா ஆகியோர் 'பாடுவோர் பாடலாம்' போட்டியின் நடுவர்களாகக் கடமையாற்றினர்.

நிகழ்வை பிரபல சிரேஷ்ட அறிவிப்பாளர் கலைநிலா உவைஸ் செரீப் மற்றும் அமுதா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இலங்கையின் மூத்த கலைஞர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், வளர்ந்து வரும் இசைக்கலைஞர்களுக்கான இசைப்போட்டியும் உள்ளூர் கலைஞர்களின் பாடல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. இசைப் போட்டியின் இறுதிச்சுற்றில் முதலாம், இரண்டாம், மூன்றாம், இடங்களைப் பெற்றவர்களுக்கு பணப்பரிசுகளும் வழங்கப்பட்டதுடன் சமூக சேவை, ஊடகத்துறை, கலைத்துறையில் சேவையாற்றிவரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் கள் மற்றும் வளர்ந்து வரும் ஊடகவியலாளர்கள்  பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது சிரேஷ்ட அறிவிப்பாளர் கலைநிலா உவைஸ் செரீப், கலைத்துறையில் ஆற்றிவரும் சேவைக்காக பாராட்டி அதிதிகளால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe