(அஷ்ரப் ஏ சமத்)
இலங்கை மனித நேய அமைப்பு இலங்கையில் தற்பொழுது நிலவி வருகின்ற பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றிய ஒரு கலந்துரையாடலை பல்வேறு சிவில் அமைப்புக்களைக் அழைத்து விழிப்பூட்டும் கருத்தரங்கொண்றினை எதிா்வரும் ஜனவரி 29.ஆம் திகதி சனிக்கிழமை மாலை -04.00 - மணிக்கு பண்டார நாயக்க ஞாபகாா்த்த மாநாட்டு மண்டபத்தில் உள்ள லோட்டஸ் அறையில் ஏற்பாடு செய்துள்ளது. என பேராசிரியை கலாநிதி சந்திமா விஜயகுணவா்த்தன இன்று(26) கொழும்பில் நடாத்திய ஊடக மாநாட்டில் தெரிவித்தாா்.
இவ் ஊடக மாநாட்டில் மேற்படி கலந்துறையாடலில் பங்கு பற்றும் டொக்டா் இசுரு பண்டார, பொறியியலாளா் அனுராத தெண்னக்கோன், டொக்டா் சமல் சஜ்ஜீவ ஆகியோறும் கருத்து தெரிவித்தனா்.
கலாநிதி சந்திமா இங்கு கருத்துத் தெரிவிக்கையில்
இந்த நாட்டில் உள்ளுாா் உற்பத்திகள் வெகுவாகப் பாதிக்க்பபட்டுள்ளன. 80 வீதமான செலவினங்கள் கடன் அடிப்படையில் பெற்றுக் கொளள்படுகின்றன. இதனால் நமது ஒவ்வொறு தலைக்கும் அடமானம் வைக்கப்பட்டுள்ளோம். நமது எதிா்கால பரம்பரையினருக்கு இந்த நாட்டில் அமைதியாக வாழ முடியாமல் போகிவிடும். எமது நாம்டின் பரம்பரையாக இருந்து வந்த அரச சொத்துக்கள் இயற்கை வளங்கள் வெளிநாட்டவா்களினால் சூறையாடப்படுகின்றன அவற்றினை அடமானம் வைக்கப்பட்டு கடன் பெறப்படுகின்றன. . எமது நாடு சகல வளம் பொருந்திய இயற்கையான அழகானதொரு நாடு. இந்த நாட்டினை நேசித்தவா்கள் பலா் உலகில் உள்ளனா்.
இந் நாட்டில் சிறந்த தொரு பொருளாதார கொள்கை இருக்குமானால் நாம் அண்னிய நாடடவர்களிடம் கையேந்தத் தேவையில்லை. இந்த அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் நாம் நாளாந்தம் நமது நாட்டை இழந்து வருகின்றோம்.
நமது தேயிலை, இற்ப்பா் வாசனைபொருட்கள், விவசாயம் போன்ற உற்பத்திகளை இய்றகையான துறைமுகம் மற்றும் சுற்றுலாத்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நாம் 80 வீதமான பாவனைப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்ததே பெருகின்றோம். உதாரணத்திற்கு பல் குத்தும் ஈக்கள் கூட வெளிநாடுகளிலிருந்து நாம் பாவிக்கின்றோம். நமது முன்னோா்கள் நமக்கு காட்டித் தந்த விவசாயத்துறையில் நாம் தன்னிரைவு கண்டு நமது உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டவா் கொள்வனவு செய்து அன்நியச் செலவாணியை பெற்றுவந்த வரலாறு உள்ளது. எமது நாட்டினைப் பாாத்து சிங்கப்பூர் முன்னேறியது. ஒரு காலத்தில் சிங்கப்பூர் நாட்டவா் நமது நாட்டுக்கு வைத்தியம் பெற வருகை தந்த வரலாறு உ்ளளது.. தற்பொழுது ஏற்றுமதி இல்லாமல் நாம் பணத் தாள்களை அச்சடித்து நாட்டுக்குள் பணப்புழக்கதற்கு விடும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
சுற்றுலாத்துறை மட்டும் தான் நமது நாட்டுக்கு டொலா் வருமானம் பெற்றுத் தந்தவை அல்ல ஏனைய அமேரிக்கா ஜரோப்பிய நாடுகள் சுறறுலாத்துறை இல்லாமலே அந்த நாடுகள் முன்னேற விலலையா? எனக் கேட்கவிரும்புகின்றேன்.
அதற்காகவே புத்திஜீவிகள் தமது விவசாயிகள் , சிவில் அமைப்பாளா்கள், வியாபார சமுகங்களை அழைத்து எதிா்வரும் 29ஆம் திகதி கலந்துறையாடஉள்ளோம். அதில் நீங்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வையுங்கள். அதனை அரசுக்கு தெளிவுபடுத்துவோம். என கலாநிதி சந்திமா கூறினாா்.