Ads Area

மாணவிகளுக்கு 1000 சைக்கிள்களை இலவசமாக வழங்கிய நடிகர் சோனு சூட்!

நடிகர் சோனு சூட்டை சினிமா வில்லனாகதான் பெரும்பாலனவர்களுக்கு தெரியும். இப்போது நாயகனாகவும் நடிக்க ஆரம்பித்துள்ளார். கோவிட் - 19 பேரிடர் காலத்தில் சோனு சூட் செய்த உதவிகள் அவரை தேசிய ஹீரோவாக உயர்த்தியது. பணமாக, பொருளாக அவர் செய்த உதவிகள் ஏராளம்.

நடிகர் சோனு சூட் எட்டு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவிகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் ஆயிரம் பேருக்கு மிதிவண்டிகள் இலவசமாக வழங்கியுள்ளார்.

நடிகர் சோனு சூட்டை சினிமா வில்லனாகதான் பெரும்பாலனவர்களுக்கு தெரியும். இப்போது நாயகனாகவும் நடிக்க ஆரம்பித்துள்ளார். கோவிட் - 19 பேரிடர் காலத்தில் சோனு சூட் செய்த உதவிகள் அவரை தேசிய ஹீரோவாக உயர்த்தியது. பணமாக, பொருளாக அவர் செய்த உதவிகள் ஏராளம்.

முக்கியமாக கொரோனா இரண்டாம் அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்பட்ட போது பலருக்கும் மருத்துவ வசதி செய்து தந்தது, உரிய மருத்துவமனைகளை பரிந்துரைத்தது என ஏராளமான உதவிகள் செய்தார்.

இப்போது பஞ்சாப் மாநிலம் மோகா பகுதியில் உள்ள 40 - 45 கிராமங்களைச் சேர்ந்த எட்டு முதல் பன்னிரெண்டு வகுப்புவரை படிக்கும் மாணவிகளில் தகுதியானவர்களுக்கு மிதிவண்டி இலவசமாக அளித்துள்ளனர் சோனு சூட்டும், அவரது சகோதரியும். இதில் சமூக சேவகர்களும் அடக்கம். மொத்தம் ஆயிரம் மிதிவண்டிகளை மோகாவில் நடந்த நிகழ்வில் அவர் இலவசமாக அளித்தார்.

இது குறித்து பேசிய அவர், கிராமத்திலிருந்து நெடுந்தூரம் கடந்தே மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த கடுங்குளிர் காலத்தில் இது சவாலானது. அவர்களுக்கு உதவிடும் வகையில் எட்டு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை பயிலும் மாணவிகளுக்கு மிதிவண்டி அளித்துள்ளோம், இது அவர்களுக்கு பயன்படும்" என கூறியுள்ளார். சோனு சூட்டின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe