நூருல் ஹுதா உமர்
அக்கரைப்பற்று ஹிஜ்ரா விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்து நடாத்திய மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரில் சாய்ந்தமருது சார்பாக கலந்து கொண்ட ஈஸ்டர்ன் பேல்ஸ் அணி பிராந்தியத்தின் பல முன்னணி கழகங்களை தோற்கடித்து இறுதியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
இச் சுற்றுத்தொடரில் இறுதியாட்டத்திற்கு சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பேர்ல்ஸ் மற்றும் சம்மாந்துறை ஈஸ்டர்ன் ஸலேஞ்ஞர்ஸ் ஆகிய அணிகள் தெரிவாகி பலப்பரீட்சை நடாத்தின. நாணயற்சுழற்சியில் வெற்றி பெற்ற ஈஸ்டர்ன் பேர்ல்ஸ் அணித்தலைவர் ஏ.என்.எம்.ஆபாக் களத்தடுப்பை தெரிவு செய்தார், இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஈஸ்டர்ன் ஸலேஞ்ஞர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 56 ஒட்டங்களைப் பெற்றது,இதற்கமைய 57 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஈஸ்டர்ன் பேர்ஸ் அணியும் அதே 56 ஓட்டங்களை 4 விக்கட்டுக்களை இழந்து பெற போட்டி சமநிலையில் முடிவடைந்ததன் காரணமாக சுபர் ஓவர் மூலம் போட்டியை தீர்மானிக்கும் பொருட்டு சுபர் ஓவர் போட்டி நடாத்தப்பட்டது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஈஸ்டர்ன் பேர்ஸ் அணி 6 பந்துகளில் 14 ஓட்டங்களை பெற பதிலளித்து ஆடிய ஈஸ்டர்ன் ஸலேஞ்ஞர்ஸ் அணி 6 பந்துகளில் 11 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது
மேலதிக 3 ஓட்டங்களால் சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பேல்ர்ஸ் அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
இச்சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஈஸ்டர்ன் பேர்ல்ஸ் இன் பர்ஹான் தெரிவு செய்யப்பட்ட அதே வேளை தொடரின் சிறப்பாட்டக்காரராக ஈஸ்டர்ன் பேர்ல்ஸ் இன் ரிசாத் தெரிவு செய்யப்பட்டார்.