சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் மலசல கூடங்களுக்கு தேவையான கதவுகள் மற்றும் வுழூ செய்யும் இடத்திற்கான நீர்குழாய் உபகரணங்கள் ஆகியவை அஸ்மி யாசீன் அவர்களின் ஏற்பாட்டினால் பெற்றுக் கொடுக்கப்பட்டு அவற்றினை பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் (11) இடம் பெற்றது.
பலாஹ் பள்ளிவாசலுக்கு கம்பரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக மலசல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டும் மலசல கூடத்திற்கான கதவுகள் மற்றும் தொழுகைக்காக வருவோர் வுழு செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் பூரணப்படுத்தப்படாமையினால் அவை இரண்டு வருடங்களாக பாவனையற்றிருந்த நிலையில் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் குறித்த இரு தேவைகளையும் நிபர்த்தி செய்து தருமாறு அஸ்மி யாசீன் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இக் கோரிக்கைக்கு அமைவாக அஸ்மி யாசீன் அவர்களின் ஏற்பாட்டில் இவ்விரு வேலைகளுக்குத் தேவையான கதவுகள் மற்றும் நீர்க்குழாய்கள் என்பன பெற்றுக் கொடுக்கப்பட்டு அவை பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அஸ்மி யாசீன் அவர்கள், சம்மாந்துறையில் காணப்படும் பல கட்டடங்கள் தரமான முறையில் உருவாக்கப்படாமையினால் இன்று சிதைவுகளும், உடைவுகளோடும் காணப்படுகின்றன. ஒரு கட்டடத்தின் ஆயுட்காலம் குறைந்தது 75 தொடக்கம் 100 வருடங்கள் ஆனால் எமதூரில் பல கட்டடங்கள் தரமற்ற நிலையிலும் உருவாக்கப்படுவதனால் ஆயுட்காலம் 20 வருடங்களை விட குறைவடைந்து செல்கின்றது.
இந் நிகழ்வில், நம்பிக்கையாளர் சபை செயலாளர் இஷாக் முஹம்மட், மஜ்லிஸா சூரா தலைவர் M.L. அப்துல் மஜீட், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் M.L. தாஸீம், கணக்காய்வாளார் S.A. ஜிப்ரி, பிரதேச சபை உறுப்பினர் நளீம், வீடமைப்பு திணைக்கள தொழினுட்ப உத்தியோகத்தர் M.M.M. முசாக்கிர், பள்ளி நிர்வாகம் மற்றும் பிரதேசவாசிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந் நிகழ்வில் இப்பள்ளிவாசலின் உருவாகத்திற்கு காரணகர்த்தாவாக இருந்த சகோதரர் முஸ்தபா அவர்கள் தொடர்பிலும் நினைவு கூறப்பட்டது.