சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் திறந்தவெளியில் முகக் கவசம் அணிவது அவசியமில்லை ஆனால் விரும்பியோர் அணிந்து கொள்ளலாம் என அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான தேசிய ஆணையம் (NCEMA) கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இருப்பினும், மூடிய அறைகளில் முகமூடிகள் கட்டாயமாக அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவிட்-19 நோயாளிகளோடு நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்தால் அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் ஐந்து நாட்கள் இடைவெளியில் இரண்டு PCR சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான தேசிய ஆணையம் (NCEMA) தெரிவித்துள்ளது.
செய்தி மூலம் - https://www.khaleejtimes.com