துபாயில் 45 ஆயிரம் திர்ஹம் பெறுமதியான 20 நீர் உரிஞ்சும் குழாய்களை திருடி விற்ற குற்றச்சாட்டின் பெயரில் ஆசிய நாடுகளில் ஒன்றைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவருக்கு துபாய் நீதிமன்றம் ஒரு மாத சிறையும் அவர் திருடிய அதே பெறுமதியான 45 ஆயிரம் திர்ஹம் அபாரதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நிறுவனம் ஒன்றில் களஞ்சியக் காப்பாளராக (warehouse keeper) பணிபுரிந்து வந்த 29 வயதுடைய ஆசிய நாட்டவர் ஒருவர் தான் பணிபுரிந்து வந்த கட்டுமான நிறுவனத்தில் உள்ள 20 நீர் உரிஞ்சும் குழாய்களை களவாடி அதனை 23 ஆயிரம் திர்ஹத்திற்கு விற்றமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு அவர் போலிஸில் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரனைகளின் போது தான் திருடியமையை ஒப்புக் கொண்ட அவர் தனது நோய்வாய்ப்பட்ட மனைவியின் மருத்துவ செலவுக்காகவே திருடியதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு தற்போது துபாய் நீதிமன்றம் 1 மாத சிறையும், 45 ஆயிரம் திர்ஹம் அபராதமும் விதித்துள்ளளோடு, தண்டனைக் காலம் முடிந்த பின்னர் நாடு கடத்தப்படவும் உள்ளார்.
செய்தி மூலம் - https://www.khaleejtimes.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.