நூருல் ஹுதா உமர்
கல்முனை கிளுகிளுப்பு அமைப்பின் ஜனாஸா நலன்புரி பிரிவின் ஏற்பாட்டில் இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை நூரானியா மையவாடியில் சிரமதான வேலைத்திட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டது.
அமைப்பின் ஜனாஸா நலன்புரி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டு அமைப்பின் தலைவர் ஏ.எம். ஆசிரின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு, இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். செடிகள், புற்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்தமையினால் ஜனாஸா நல்லடக்கம் செய்ய போதிய இடவசதி இல்லாத நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிரமதானத்தின் பின்னர் குறித்த நூரானியா மையவாடி இப்போது அழகாக காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.