Ads Area

விமான பயணத்தின் போது பெண் பாலியல் பலாத்காரம்.

அமெரிக்காவில் இருந்து லண்டன் சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவரை, சக பயணி  ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தாக  ஹீத்ரோ விமான நிலைய காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. 

விமான பயணத்தின்போது பயணிகள் உறங்கி கொண்டிருந்ததாகவும் அப்போது பிரிட்டனை சேர்ந்த அந்த நபர் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

இதனால்  தாம் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் தெரிவித்திருந்தார். விமான பயண முடிவில் அந்த நபர் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின்  புகார் மீது உடனடியாக விசாரணை நடத்திய லண்டன் விமான நிலைய காவல்துறையினர் மற்றும் தடயவியல் அதிகாரிகள்  பாலியல் பலாத்காரம் நடந்ததாகக் கூறப்பட்ட விமானப் பகுதியை முழுமையாக ஆய்வு செய்தனர். 

இதைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை அவர்கள் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.  இந்த விவகாரத்தில் லண்டன் விமான நிலைய அதிகாரிகளின் விசாரணைக்கு ஓத்துழைப்பு வழங்குவோம் என்று யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe