நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு கலாபீடத்தின் பதில் தவிசாளரும், ஓய்வுபெற்ற அதிபருமான ஐ.எல்.எம். மஜீதின் தலைமையில் கமு/ கமு/ அல்- ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுகிழமை இடம்பெற்றது.
குர்ஆன் மனனமிடும் இஸ்லாமிய பல்கலைக்கழகமான தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் பரீட்சைகளில் திறமை சித்தி பெற்ற மாணவர்கள், சிறந்த வரவை பேணிய மாணவர்கள் உட்பட பல்வேறு துறைகளில் சாதித்த மாணவர்கள் மற்றும் இவ்வாண்டுக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மெர்சி லங்கா நிறுவன திட்ட முகாமையாளர் மௌலவி என்.எம்.ஏ. ஹசன் ஸியாத் கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்தார். மேலும் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் முன்னாள் தலைவர், ஓய்வுபெற்ற பிரதியதிபர் மௌலவி யூ.எல்.எம். காஸிம் கலந்துகொண்டார். விசேட உரையை சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் தவிசாளர் சட்டத்தரணி மௌலவி என்.எம்.ஏ. முஜீப் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.ஹிபதுல் கரீம், செயலாளர் ஐ.எல்.எம். மன்சூர், பொருளாளர் ஏ.ஏ. சலீம், சாய்ந்தமருது மாளிகைக்காடு உலமா சபை தலைவர் மௌலவி எம்.எம். சலீம் உட்பட உலமாக்கள், கமு/ கமு/ அல்- ஹிலால் வித்தியாலயம் மற்றும் சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலய அதிபர்கள், பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில், சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் ஆளுநர் சபை உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.