சம்மாந்துறை அல் முனீர் வித்தியாலய ஆளணியினருக்கான இணைய வன்முறை மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளை அடையாளப்படுத்தும் பயிற்சி பட்டறை நிகழ்வு பிரதி அதிபர் A. முகம்மட் றிஸ்வான் அவர்களின் தலைமையில் Gafso நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் காமில் இம்டாட் அவர்களின் ஏற்பாட்டில் Thombukandam Village Resort இல் கடந்த சனிக்கிழமை (12) முழுநாள் செயலமர்வாக இடம் பெற்றது.
இதில் வளவாளர்களாக Gafso நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் காமில் இம்டாட் அவர்களும், அம்பாரை மாவட்ட பெண்கள், சிறுவர் பிரிவு பொறுப்பதிகாரி திசானி கமகே அவர்களும், காரைதீவு பிரதேச செயலக மகளிர், சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜெனிதா மோகன் அவர்களும், நீதிமன்ற முதலியார் நஜிமுதீன் அவர்களும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிலுநர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.