Ads Area

AYEVAC தலைமைத்துவ பயிற்சி முகாம் : இலங்கை முழுவதிலுமிருந்து இளைஞர்கள் பங்கேற்றனர்.

 ( நூருல் ஹுதா உமர்)

AYEVAC தலைமைத்துவ பயிற்சி முகாம் தம்புள்ளை ரங்கிரிரி மண்டபத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது.  இந்த தலைமைத்துவ பயிற்சி முகாமில் இலங்கையின் 25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 15 முதல் 24 வயதிற்குட்பட்ட  இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட AYEVAC தலைவர்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளவும், தங்கள் குழு உணர்வை மேம்படுத்தவும் இந்நிகழ்வு மூலம் வாய்ப்பு கிடைத்தது. தற்போது பாரிய பிரச்சினையாக உள்ள இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு நாடளாவிய ரீதியில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த நிகழ்ச்சியில் தீர்மானிக்கப்பட்டது.  மேலும், AYEVAC இளைஞர் இயக்கம், தற்போது குழந்தைகளை நெறிப்படுத்தப் பயன்படுத்தப்படும் உடல் ரீதியான தண்டனையை நிறுத்த வேண்டும் எனும் நோக்கில், உடல் ரீதியான தண்டனையை நிறுத்தவும், நேர்மறையான பெற்றோருக்குரிய முறைகளை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தின் மூலம், முன்பு 10 மாவட்டங்களில் மட்டுமே பரவியிருந்த AYEVAC இளைஞர் அமைப்பு, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக புதிய நிர்வாக அங்கத்தவர்களை உள்ளடக்கியதாக விருத்தியடைந்தது.  AYEVAC இளைஞர் தலைவர்கள் தங்கள் தலைமையின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தவும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த அடிப்படைக் கோட்பாட்டுக் கருத்துக்களைப் புரிந்து கொள்ளவும் இவ் பயிற்சி முகாம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe