( எம்.என்.எம். அப்ராஸ் )
"சமூக அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் இளம் பெண்களை ஊக்குவித்தலும், பங்கேற்பை அதிகரித்தலும்" எனும் தலைப்பில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் ஸ்டார் விங்ஸ் அமைப்பின் தலைவி எம்.எஸ்.றக்ஸானா பானுவின் தலைமையில் பொது மக்களுக்கு ஒருநாள் செயலமர்வொன்று நற்பிட்டிமுனை தனியார் மண்டபத்தில் (22)இடம்பெற்றது.
SEARCH FOR COMMON GROUND (சேர்ச் போ கொம்மன் கிரவுண்ட்) அனுசரணையில் நடைபெற்றஇந்நிகழ்வில் "சமூக இன நல்லிணக்கத்தை அதிகரித்தல்" எனும் தொனிப் பொருளில் சமாதனம் மற்றும் சமூகப்பணி நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் டி.தயாபரன் மற்றும் "சமூக சேவையில் பெண்களின் சமூக சேவையில் பெண்களின் பங்களிப்பு”எனும் தொனிப் பொருளில்,சமூக ஆர்வலர் எம்.வை.எம்.வை.இம்ரான் ஆகியோர் வளவாலராக கலந்து கொண்டு கருத்துரைத்தனர்.
இந்நிகழ்வில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் இணைப்பாளர் யூ.எல். ஹபீலா, சமூகவசதிப்படுத்துனர் ஆர்.அனுஸ்கா, வழிகாட்டிகளான கல்முனை மாநகர சபை உறுப்பினர் , கே. விஜயலக்ஸ்மி, எம்.எம்.ஜே.பர்வின்,கல்முனை அஸ்ஸுஹரா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதியா,பெண்கள்அபிவிருத்தி உத்தியோகத்தர் பி. ஜெனித்தா,பங்குதாரர்கள் உட்பட இளம் பெண் தலைவிகளான ஜே.எப்.ஜெஸ்னா,டி.லுக்சிகா , எம்.எஸ். றக்ஸானாபானு, ஏ.எச். பசீலா,ஏ.எச்.சசீமா, ஆர். றொஸானா,ஜே. சிந்துஜா,ஏ.ஆர்.எப்.நஜீபா, ஜே.எப். ஜெஸ்னி எனப்பலரும் கலந்து கொண்டனர்.