அஸ்ரப் ஏ சமத்.
கல்வி மேம்பாட்டுப் பேரவையின் (Education Development Council) ஏற்பாட்டில் இடம் பெற்ற தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தலைநகர் கலாதாரி ஹோட்டலில் நேற்று இடம் பெற்றது.
பிரதம அதிதியாக சமுதீன் நியாஸ், LLB. (cey) LLM அவர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் தலைமை அதிகாரி மருதுார் ஏ ஹசன் , அட்டர்னி-அட்-லா, சுங்கத் துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றியோருக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
இந் நிகழ்வில் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் டீ-சேர்ட் வெளியிடப்பட்டதோடு, முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வழிகாட்டி நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக றிஸ்லி முஸ்தபா (கல்முனை - SLPP), ஃபவாஸா தாஹா, (தலைவர் YWMA) மற்றும் மொஹமட் அஸீம் ஆதம்பாவா ஆகியோரும் கலந்து கொண்டனர்.