தகவல் - சம்மாந்துறை அன்சார்.
நிறைய சகோதரர்கள் சவுதியிலிருந்து இலங்கை செல்ல அல்லது இலங்கையிலிருந்து சவுதி வர பி.சி.ஆர். நெக்கடிவ் சான்றிதழ் அவசியமாக இல்லையா என்ற குழப்ப நிலையில் இருப்பதாகவும் அது தொடர்பில் விளக்கமளிக்குமாறும் என்னிடம் வேண்டி நிற்கின்றனர்.
சவுதி அரேபியாவின் தற்போதைய (5, March) புதிய அறிவிப்பின்படி வெளிநாடுகளிலிருந்து சவுதி அரேபியாவுக்கு வருவோர் பி.சி.ஆர். நெக்கடிவ் சான்றிதழ்கள் பெற்றிருப்பது அவசியமில்லை என சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ஆகவே சவுதிக்கு புதிதாக யாராவது வருவதாக இருந்தாலோ அல்லது சவுதியிலிருந்து இலங்கைக்கு விடுமுறையில் சென்றவர்கள் மீண்டும் சவுதிக்கு வருவதாக இருந்தாலோ அத்தகையோர் வீணாக பணம் செலவு செய்து பி.சி.ஆர். நெக்கடிவ் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளத் தேவையில்லை.
ஆதாரமான தகவலுக்கு இந்த லிங்கை - https://saudigazette.com.sa கிளிக் செய்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
இதே போல் வெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்வோர் மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து இலங்கை செல்வோரும் பி.சி.ஆர். நெக்கடிவ் சான்றிதழ்களை பெறத் தேவையில்லை என அண்மையில் இலங்கை அரசாங்கமும் புதிய சுகாதார வழிகாட்டல்களை வழங்கியிருந்தது. இதன் அடிப்படையில் சவுதியிலிருந்து இலங்கைக்கு விடுமுறை அல்லது எக்ஸிட் செல்வோர் நீங்கள் பி.சி.ஆர். நெக்கடிவ் சான்றிதழ் பெறத் தேவையில்லை என்பதையும் மனதில் கொள்க.
ஆதாரமான தகவலுக்கு இந்த லிங்கை - https://www.srilankan.com and http://www.adaderana.lk கிளிக் செய்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
இரு நாடுகளின் (சவுதி-இலங்கை) குறித்த அறிவித்தல்களுக்குப் பிறகு பி.சி.ஆர். நெக்கடிவ் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாது பயணம் செய்த பலர் தங்களது பயண அனுபவங்களை பகிர்ந்துள்ளனர் அதில் அவர்கள் தாங்கள் பி.சி.ஆர். நெக்கடிவ் சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளாதுதான் பயணம் செய்ததாக தெரிவித்தும் உள்ளனர்.
ஆகவே...பி.சி.ஆர். நெக்கடிவ் சான்றிதழ்கள் விடையத்தில் குழம்பிக் கொள்ளத் தேவையில்லை, அதிக பணம் செலுத்தி உங்களுக்கான பி.சி.ஆர். நெக்கடிவ் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு ஏமாறவும் தேவையில்லை.