Ads Area

சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலத்தின் முப்பெரும் விழா.

யூ.கே. காலித்தீன்

சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலத்தின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் ஏ. முஹம்மட் அன்சார் அவர்களின் தலைமையில் பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி அதிகாரி எஸ்.புவனேந்திரன் கலந்துகொண்டார்.

பாடசாலையின்  வரலாற்றில் 1959 ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பாடசாலையானது கடந்த சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட்ட பாடசாலையாகும். 

கடந்த காலங்களில் கடமையாற்றிய அதிபர்களும், ஆசிரியர்களும் முயற்சி செய்த போதும் பாரியா முன்னேற்றம் காணாத போதும் இம்முறை 2021 ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் முதன் முறையாக வரலாற்றுச் சாதனை படைத்த 04 மாணவர்களான ஏ.ஏ.பாத்திமா (161), ஜே.அதினா (155), 

ஏ.எம். பாத்திமா அஜ்ஹா (155) ஆகியோர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றதோடு, கண்பார்வையற்ற விரல்களால் தொட்டு உணர்ந்து வாசித்து பிரைல் மூலம் விடை எழுதும்  விஷேட தேவையுடைய மாணவன் எம். தன்வீர் ஆசிப் (136) ஆகிய மாணவர்கள் சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தமை விஷேட அம்சமாகும்.

இதன் போது புலமைப் பரீட்சையில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் நினைவுச் சின்னங்களும் பரிசீல்களும் வழங்கியதோடு அதிதிகளுக்கு பொன்னாடையும் போற்றி கௌரவிக்கப்பட்டனர். 

இப்பாடசாலையில்  புலமைப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவிப்பும், மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டு நிகழ்வும் மற்றும் பாலர் பாடசாலையின் வகுப்பறை திறப்பு விழா ஆகியன முப்பெரும் விழாவாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe