Ads Area

(Str24)மனைப்பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் உடல் உள ஆரோக்கியத்தின் அவசியம் என்ற தொணிப்பொருளிலான நிகழ்வு.

 ( அஸ்ஹர் இப்றாஹிம்)

காரைதீவு பிரதேச செயலகத்தின் காரைதீவு 09,10,11,12 ஆகிய கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட செளபாக்கியா நிகழ்ச்சித் திட்டத்தின் பயனாளிகளுக்கான சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார நுண் நிதிய சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் உளவளத்துணை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மனைப்பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் உடல் உள ஆரோக்கியத்தின் அவசியம் என்ற தொணிப்பொருளிலான நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

உளவளத்துணை உத்தியோகத்தர் பாத்திமா பர்ஸானா அவர்களின் ஏற்பாட்டில் காரைதீவு பல்தேவைக் கட்டிடத்தில்  இடம்பெற்ற நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர்  எஸ். ஜெகராஜன் கலந்து கொண்டார்.

காரைதீவு சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர்  ஹச்சி முஹம்மட், காரைதீவு பிரதேச செயலகத்தின் உளவளத்துணை உத்தியோகத்தர்களான  பாத்திமா பர்ஸானா,  முஹம்மட் ஹப்றத், பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்  சர்பின், காரைதீவு 12 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்  நாகலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்வில் கலந்து கொண்ட 50க்கு மேற்பட்ட பயனாளர்களுக்காக உளநலம் என்றால் என்ன, உடல் உள நலத்தின் முக்கியத்துவம், ஆரோக்கியமும் மனைப்பொருளாதாரமும், உளப் பிரச்சினைகளின் போது உதவி பெறக் கூடிய நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான அறிவூட்டல் வழங்கப்பட்டது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe