Ads Area

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகளால் பொது மக்கள் அவதி; தெய்வதீகமாக ஒரு குடும்பம் உயிர் தப்பியது.

 சம்மாந்துறை நிருபர் (ஐ.எல்.எம் நாஸிம்)

அம்பாறை மாவட்ட சம்மாந்துறை  பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீதிகளில்உலாவித்திரியும் கட்டாக்காலி மாடுகளால் நேற்று இரவு 10 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் வீதியில் கார் ஒன்றும்  விபத்துக்குள்ளாகியது.தெய்வீகமாக காரில் பயணித்தோர் உயிர் தப்பினர்.

இது குறித்து சம்மாந்துறை பிரதேச சபையிடம் பல முறை  சுட்டி காட்டிய போதும் ஆக்கபூர்வமானநடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக இரவு நேரங்களிலும் வீதி விளக்குகள்அணைக்கப்படுகின்றது.ஆகவே கட்டாக்காலி மாடுகள் வீதியில் உலாவித்திருந்தால் எதிர் வரும் காலங்களில்வீதி விபத்துக்கள் அதிகரிக்கும் என மேலும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.   

எனவே, பிரதேச சபை ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe