நூருல் ஹுதா உமர்
இறக்காமம் பிரதேசத்தில் மகளீர் தினத்தைச் சிறப்பிக்கும் முகமாக "நாடும் தேசமும் உலகமும் அவளே" எனும் கருப்பொருளின் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் இறக்காமம் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் செவ்வாய் கிழமை வெகு சிறப்பாக மகளீர் தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.
பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர். றிஸ்வானுல் ஜன்னாஹ் மற்றும் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் ஆர்.எஸ். றிஸ்மியா ஜஹான் ஆகியோரின் நெறியாழ்கையில் இடம்பெற்ற இப் பெண்கள் தின விஷேட நிகழ்விற்கு மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜகதீசன் பிரதம அதீதியாக கலந்து கொண்டதுடன், விஷேட அதீதிகளாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், கணக்காளர் றிம்ஷியா அர்சாட் ஆகியோரும், கௌரவ அதிதிகளாக நிருவாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமீல், கிராம நிலதாரிகளுக்கான நிருவாக உத்தியோகத்தர் எச்.பி. இந்திரசிறி யசரட்ன மற்றும் இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் ஏ. சுபுஹான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேற்படி மகளீர் தின நிகழ்வில் விஷேட அம்சமாக "வனிதா அபிமான" போட்டி நிகழ்ச்சியில் மாகண மட்டத்தில் வெற்றியீட்டிய போட்டியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும் மூவின மக்களையும் உள்ளடக்கிய கலை நிகழ்ச்சிகள், ஹிஜ்ரா பெண்கள் அபிவிருத்தி சங்கத்தின் பெண்கண் தின சிறப்பு நாடகம், பெண்கள் தின சிறப்பு கவிதை, பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் இயங்கிவரும் பெண்கள் அபிவிருத்தி சங்கங்களில் சிறப்பாக செயற்பட்டு வரும் சங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான கௌரவமும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.