Ads Area

சீமெந்து மூடை ஒன்றின் விலை 600 ரூபாவால் அதிகரிப்பு!

அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கருத்தில் கொண்டு சீமெந்து விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக சீமெந்து விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சந்தையில் தற்போது 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடை ரூ.2300 - 2350 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதால்,  சீமெந்தின் புதிய விலையை ரூ.500 - 600 ரூபாவால் உயர்த்த சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

சீமெந்து விலை உயர்ந்துள்ளதாலும், புதிய கட்டிடங்களின் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளதாலும் சீமெந்தின் தேவை குறைந்துள்ளதாகவும், இதனால் மொத்த விற்பனைக் கடைகளில் சீமெந்து இருப்பு இல்லை எனவும் சிமெந்து விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி - தினக்குரல்



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe