Ads Area

கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டமும் ,இப்தார் நிகழ்வும்.

 ( எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பின் 2022  ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டமும், இப்தார் நிகழ்வும் கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் அமைப்பின் தலைவர் முர்ஷித் முபாரக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்வினை ஆரம்பித்து வைக்கும் முகமாக முதலில் அமைப்பின் தலைவர் முர்ஷித் முபாரக்கின் தலைமை உரை இடம்பெற்றது.

பின்னர் இப்தார் நிகழ்வு இடம்பெற்றதுடன், தொடர்ந்து, அதிதிகளின் உரை,பொருளாலரால் கணக்கறிக்கை சபையோர் முன்னிலையில் வாசிக்கப்பட்டதுடன், 2020 ஆம் ஆண்டு கல்முனை பிரதேசத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் முகமாக சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டது. 

அத்துடன் அமைப்பின் 2022 ஆம் ஆண்டிற்க்கான புதிய நிருவாக உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது  இதன் போது தலைவராக எல்.எம்.எம்.அன்சாப் அஹமட்,செயலாளராக எம்.எப்.ராசில் அஹமட், பொருளாலராக அஷ்ரப் முஹம்மட் வாபி உட்பட நிருவாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர் இறுதியாக அமைப்பின் புதிய செயளாலரால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு நிகழ்வுகள் முடிவடைந்தது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe