ரொட்டி ஒன்றின் விலையை 30 ரூபாவினால் அதிகரிக்க பேக்கரி உரிமைாளர் சங்கம் தீர்மானித்துள்ளது இதனடிப்படையில் ஒரு பாணின் விலை 140 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
450 கிராம் நிறை கொண்ட பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படும் அதே வேளை இதர பேக்கரி பொருட்கள் ஒவ்வொன்றும் ரூ.10 வரை அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பின் எதிரொலியாகவே பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.

