பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்கான உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காவிட்டால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையையே கொண்டுவரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீர் காசிம் தெரிவித்துள்ளார்.
முன்னர் தீர்மானிக்கப்பட்டது போல அடுத்தவாரம் நாடாளுமன்றம் கூடும்போது முதல் அமர்விலேயே அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது ஜனாதிபதிக்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணையாகயிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.