Ads Area

மக்கள் எதிரிகள் இல்லை மக்களின் விரக்தி நிலையை பார்க்கும்போது இதயம் நொருங்குகின்றது- குமார் சங்கக்கார.

இலங்கை மக்கள் மிகவும் கடினமான காலத்தை எதிர்கொண்டுள்ளனர்,நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் விரக்தி நிலையை பார்க்கும்போது இதயம் நொருங்குகின்றது என இலங்கை கிரிக்கட் ஜாம்பவானும், மனிதநேயமிக்கவருமான குமார சங்ககார தெரிவித்துள்ளார்.

ஓவ்வொரு நாளும் முந்தைய நாளை விட கடினமானதாக காணப்படுகின்றது. மக்கள் தங்கள் குரல்களை உயர்த்தி என்னதேவையோ அதனை கேட்கின்றனர். சிலர் தங்கள் குரல் வெளிப்படுவதற்காக மனக்கசப்பு மற்றும் சீற்றத்துடன் செயற்படும் அதேவேளை ஏனையவர்கள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றனர்.

மக்களை செவிமடுப்பதும்,அழிவை ஏற்படுத்தும் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களை  ஒதுக்கி வைப்பதும், நாட்டின் சிறந்த நலனை கருத்தில்கொண்டு செயற்படுவதுமே சரியான தீர்வாகும்.

மக்கள் எதிரிகள் இல்லை, இலங்கை என்பது அதன் மக்கள் நேரம் வேகமாக ஒடுகின்றது மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவேண்டும் வழங்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe