பாறுக் ஷிஹான்
அம்பாறை, நிந்தவூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அல்லி மூலை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (5) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தார்.
பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த பொலிஸார், ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இம்மரணம், தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை மத்திய முகாம் நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.