Ads Area

எந்த தேர்தல் வந்தாலும் சாய்ந்தமருது சார்பாக ஒருவர் நிறுத்தப்படுவாராக இருந்தால் அது நானாகத்தான் இருப்பேன் ; மு.கா பிரதிப் பொருளாளர் அறைகூவல் !

 நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருதில் மு.காவுக்கு தலைமை வகித்து தேர்தல்களை நடத்திக் காட்டுவேன் என சூளுரைத்துள்ளார் மு.கா பிரதிப் பொருளாளரான ஏ.சி.யஹியாகான். பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் சிறுவர் நிகழ்ச்சிகளும் அண்மையில் கமு/கமு/ அல்- ஜலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதிப் பொருளாளரும் யஹியாகான் குரூப் நிறுவனத்தின் தவிசாளருமான ஏ.சி.யஹியாகான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்துக்களை வெளிப்படுத்தினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

முகாவில் நீண்ட காலமாக பயணிக்கின்றேன். தலைமைக்கு விசுவாசமாக செயற்படுகிறேன். ஒருபோதும் துரோகம் செய்தது கிடையாது. கட்சி தாவி அங்கு அனைத்தையும் அனுபவித்து விட்டு , மீண்டும் மு.காவில் இணைந்து தேர்தலில் வெற்றி பெறலாம் என பகற் கனவு காண்கின்றனர். அது ஒருபோதும் நிறைவேறாது. பிந்தி வந்தவர்கள் பின் வரிசையில் தான் அமர வேண்டும்.

எந்த தேர்தல் முதல் வருகின்றதோ அந்த தேர்தலில் சாய்ந்தமருது சார்பாக ஒருவர் நிறுத்தப்படுவாராக இருந்தால் அது நானாகத்தான் இருப்பேன் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. தலைவரும் அவ்வாறானதொரு நிலைப்பாட்டுக்கே வருவார் என நம்புகிறேன். அந்த தேர்தலில் சாய்ந்தமருதை எனது தலைமையிலேயே முன்னெடுப்பேன் என்றார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe