Ads Area

சவுதியில் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட மூவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவில் நேற்று தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த மூவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு சவுதி குடிமக்களுக்கும் மற்றும் ஒரு எமன் நாட்டவருக்குமே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட பின்னர் தூக்கிலிட்டதாக சவுதி அரேபிய உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் (SPA) சனிக்கிழமையன்று உள்துறை அமைச்சக அறிக்கையை மேற்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட சவுதி குடிமகன்களில் ஒருவரான முஹம்மத் பின் கிதிர் பின் ஹாஷிம் அல்-அவாமி என்பர் பயங்கரவாத பிரிவு ஒன்றில் இணைந்து செயற்பட்டமைக்காகவும், நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்காகவும், பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து, பொதுச் சொத்துக்களை அழித்தமைக்காகவும் தனது வீட்டில் வெடிபொருட்களை மறைத்து வைத்தமைக்காகவும் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றபட்டுள்ளது.

அதே போல் மற்றொரு சவுதி குடிமகனான ஹுசைன் பிஎன் அலி அல் பு-அப்துல்லா என்பவர் பயங்கரவாதிகளுடன் பணிபுரிந்ததற்காகவும், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக் கொன்றதற்காகவும், நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பெற்று பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளித்ததற்காகவும் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மற்றொருவரான எமன் நாட்டைச் சேர்ந்த முகமது அப்துல்பாசெட் அல்-முல்லாமி, ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகளுடன் "பயங்கரவாதத்துடன்" சேர்ந்ததற்காகவும், பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்ள சட்டவிரோதமாக சவுதிக்குல் நுழைந்தமைக்காகவும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe