Ads Area

பல தசாப்தங்களாக ரணிலை நிராகரித்துவந்த அதாஉல்லா ரணிலின் தலைமையில் பயணிக்க தயாரென அறிவித்தார் !

 நூருல் ஹுதா உமர்

சவால்களை எதிர்கொள்ள புதிய பிரதமர் நியமனத்திற்கு பாராளுமன்றத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவினால் தேசிய காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட உத்தியாேக பூர்வமான கடிதம் தொடர்பிலும் கட்சியின் உயர் பீடத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன் நாடு தற்பாேது எதிர்கொள்ளும் தேசிய பொருளாதார நெருக்கடியை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக தேசிய காங்கிரஸ் பார்ப்பதோடு மட்டுமன்றி நமது நாட்டு மக்களுக்காக அவை அனைத்தும் அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது என தேசிய காங்கிரஸின் சட்டம் மற்றும் கொள்கை விவகார ஆலோசகர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா தெரிவித்தார்.

நாட்டுமக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை கையாள்வதற்காக, நாட்டின் ஜனாதிபதி, புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்துள்ள இவ்வேளையில் தேசிய காங்கிரஸ் இது தொடர்பில் முக்கிய தீர்மானங்களை எட்டுவதற்காக அதன் உயர் பீடம், தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லா தலைமையில் திங்கட்கிழமை மாலை கொழும்பில் கூடியது. இதன்பின்னர் அவர் விடுத்த அறிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் இது தொடர்பில் தெரிவித்து அவர்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தருணத்தில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களுக்கான உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு புதிய பிரதமரின் செயற்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான முடிவினை தேசிய காங்கிரஸின் உயர்பீடம் எட்டியுள்ளது. மேலும் பாராளுமன்றத்தில் ஒன்றாகச்  செயற்படும் சக பத்துக்கட்சிகளாேடு இணைந்து தேசிய காங்கிரஸின் கொள்கைகளுக்கு அமைவாக ஒவ்வாெரு விடயதானத்தையும் தனித்தனியாகக் கருத்திற் கொண்டு  அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கும் கட்சி உயர் பீடம் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த உயர்பீட கூட்டத்தில் தலைவர், அவரது குடும்ப உறுப்பினர்கள் அடங்களாக 09 பேர் மட்டுமே கலந்து கொண்டமைக்கான புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளதுடன் நிறைய உயர்பீட உறுப்பினர்கள் இந்த கூட்டத்தை நிராகரித்து கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தவிர்ந்து கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe