சவுதி அரேபியாவில் முதல்முறையாகப் பெண்கள் மட்டும் கொண்ட விமானச் சிப்பந்திகள் குழுவுடன் விமானப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அந்நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
அண்மையில் flyadeal விமானம் சவுதி அரேபியாவின் ரியாத் நகரிலிருந்து ஜெட்டாவிற்குச் சென்றது. இதில் பெரும்பாலானோர் சவுதிப் பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மை ஆண்டுகளில், சவுதி அரேபியாவின் விமானத்துறையில் பெண்களுக்கான வேலைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammed bin Salman) அந்நாட்டுப் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்திச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளார்.